[X] Close

ஓட்டுநர் இல்லாமலே 92 கிலோ மீட்டர் தொலைவு சென்ற சரக்கு ரயில்


goods-train-run-without-driver

பிரதிநிதித்துவப் படம்

  • kamadenu
  • Posted: 06 Nov, 2018 18:21 pm
  • அ+ அ-

சரக்குகளை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமலேயே 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்த ஆச்சரிய சம்பவம் ஆஸ்திரேலியா நாட்டில் நேற்று இரவு நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரமாண்டமான பிஎச்பி சுரங்கம் பெர்த் நகருக்கு அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து ஒருங்கிணைந்த ரிமோட் ஆபரேஷன்ஸ் மையத்திலிருந்து இரும்புத் தாதுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

அதற்குள் கேரேஜ்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்துவர ஓட்டுநர் தனது இருக்கையிலிருந்து இறங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் திரும்பிவருவதற்குள் திடீரென ரயில் கிளம்புத் தொடங்கியது.

மெல்ல வேகமெடுத்து, மணிக்கு 110 கி.மீ.வேகத்தில் வேகத்தில் பாய்ந்து சென்ற ரயில் 92 கிமீ வரை சிக்கல் இல்லாமல் ஓடியது.

அதன்பிறகு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயில் நிறுத்தப்பட்ட இடம் ஹெட்லேண்ட் துறைமுகத்திற்கு முன்னதாக 119 கி.மீ. தொலைவு என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 'உலகின் முதல் நீண்ட தூர தானியங்கி கனரக சரக்கு ரயில்' போக்குவரத்தை ஆஸ்திரேலியா ரயில்வேதுறை செயல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஆளில்லாமலேயே ஒரு சரக்கு ரயில் சுரங்கத்திலிருந்து 92 கி.மீ. தொலைவு ஓடிய இச்சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close