[X] Close
 

மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் புதின்: தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார்


putin-cruises-to-landslide-election-win

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Mar, 2018 10:04 am
  • அ+ அ-

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புதின் 4-வது முறையாக அந்நாட்டின் அதிபராகிறார். ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். அவரது பதவிக் காலம் நிறைவடைவதால் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.


தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதில் தற்போதைய அதிபர் புதின் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.


சுயேச்சையாக போட்டியிட்ட புதின், விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். ரஷ்ய கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பவெல் குருடினின், தொலைக்காட்சி அறிவிப்பாளர் செனியா சோப்சக், லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் விளாடிமிர் சிரினோவ்ஸ்கி உட்பட ஒட்டுமொத்தமாக 8 வேட்பாளர்கள் 
இத்தேர்தலில் களம் கண்டனர்.


இத்தேர்தலில், சுமார் 76 சதவீத வாக்குகள் பெற்று புதின் அமோக வெற்றி பெற்றார்.  புதினுக்கு அடுத்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பவல் குருதினின் 12 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.   


முதற்கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய புதின், "இத்தேர்தல் முடிவுகள் கடந்த சில ஆண்டுகளில் நான் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம். மக்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தேர்தல் முடிவுகள் மூலம் நான் காண்கிறேன்" என்றார். 


கணிப்புகள் பலித்தன: 
ரஷ்ய ஊடகங்கள் மற்றும் மாஸ்கோ அரசியல் வட்டாரங்களின் கணிப்புப் படி விளாடிமிர் புதின் 4-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்திருந்த நிலையில் அது உண்மையாகியுள்ளது. 20 ஆண்டு காலமாக ரஷ்யாவில் அதிபர் புதினின் ஆதிக்கம் தொடர்கிறது.
கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார். 1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.
பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2012-ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக அதிபரானார். தற்போது 2018 தேர்தலிலும் வெற்றி பெற்று 4-வது முறையாக அதிபராகிறார்.

[X] Close