[X] Close

ஏமன் போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது குழந்தை பரிதாப பலி


7-year-old-girl-face-of-yemen-crisis-dies

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Nov, 2018 16:23 pm
  • அ+ அ-

ஏமன் நாட்டின் உள்நாட்டு போர் துயரத்தின் சாட்சியாக இருந்த 7 வயது சிறுமி அமல் ஹூசைன் பரிதாபமாக பலியானார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த வாரம் அமலின் படம் வெளியானது. புலிட்சர் விருது பெற்ற டைலர் ஹிக்ஸ் இந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார்.

யுனிசெப் முகாமில் மெத்தையில் எலும்பும் தோலுமாகக் கிடந்த அமல் ஹூசைனின் புகைப்படம் காண்போரை கதி கலங்க வைத்தடும். ஏமன் உள்நாட்டுப் போரின் சாட்சியாக இருந்தாள் அமல். உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பசியின் கொடுமையால் அமல் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து ஹூசைனின் தாயார் மரியம் அலி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு தொலைபேசி மூலம் பேசும்போது, "எனது இதயம் நொறுங்கிவிட்டது. அமல் எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருப்பார். இப்போது எனது மற்ற குழந்தைகள் மீது எனது கவலை திரும்பியுள்ளது" என்றார்.

2015-ல் மத்திய கிழக்கு நாடான ஏமனில் அமெரிக்க ஆதரவு கொண்ட சவுதி தலைமையிலான படைகளுக்கும் ஈரானுடன் ஆதரவு ஹவுத்திகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிலவுகிறது. இதுவரை 10000 உயிர்கள் பலியாகியுள்ளன.

ஏமனில் 1.2 கோடி மக்கள் தீவிர பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close