[X] Close

குடித்துவிட்டு விமானம் ஓட்ட வந்த பைலட் கைது


japan-airlines-pilot-held-for-being-drunk

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 02 Nov, 2018 12:15 pm
  • அ+ அ-

லண்டனிலிருந்து டோக்கியோவுக்கு செல்லும் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்டவிருந்த விமானி, அளவுக்கதிகமாக குடித்திருந்ததால் கைது செய்யப்பட்டார். 

அனுமதிக்கப்பட்ட அளவை விட பத்து மடங்கு மது அவரது ரத்தத்தில் கலந்திருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. கைதான கட்சுடோஷி ஜிட்சுகாவா என்ற 42 வயது விமானி, தான் செய்த தவறை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 

விமானம் புறப்பட 50 நிமிடங்கள் இருந்த போதே இந்த ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. 80 மில்லிகிராம் அளவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது இரத்தத்தில் 189 மில்லிகிராம் அளவு கலந்திருந்தது. முன்னாள் இரவுதான், இரண்டு பாட்டில் வைனும், பெரிய ஜக் பியரும் குடித்ததாக விமானி கூறியுள்ளார். நவம்பர் 29 அன்று இவருக்கான தண்டனை வழங்கப்படவுள்ளது. 

ஜப்பான் ஏர்லைன்ஸ் தரப்பு பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது. ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின் விமானம் புறப்பட்டுச் சென்றது. 

- ஏ.என்.ஐ

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close