[X] Close

வரியில்லா இறக்குமதி பட்டியலில் இருந்து 50 இந்திய பொருட்களை நீக்க அமெரிக்கா முடிவு


imported-things

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 10:49 am
  • அ+ அ-

இந்தியாவிலிருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்துவந்த  50 பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.   இது தொடர்பாக வெளியான தகவல்களில்,  இந்தியாவிலிருந்து வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் 90 பொருட்களில் 50 பொருட்களுக்கு வரியில்லா இறக்குமதியை திரும்ப பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.  இதில் பெரும்பாலானவை இந்திய கைவினைப் பொருட்கள், விவசாயத் துறை உற்பத்தி பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச வர்த்தக உறவுகளில் இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான வரிவிலக்கினை நீக்க  முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிக்கையினை அமெரிக்க பெடரல் பதிவு செய்துள்ளது. அதில்,  பொதுவான முன்னுரிமை நடைமுறை (GSP-Generalized System of Preferences) அடிப்படையில் இந்தியாவிலிருந்து  90 பொருட்கள்  வரியில்லாஇறக்குமதி பட்டியலில் உள்ளன. இந்த நிலையில் அதிபர் செவ்வாய்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், நவம்பர் 1-ம் தேதியிலிருந்து வரியில்லா இறக்குமதி பட்டியலில் இருக்கும் பொருட்கள் நீக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நவம்பர் 1-ம் தேதிநிலவரப்படி, ஜிஎஸ்பி விதிமுறைகள்படி இந்த பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது. அதேநேரத்தில் அமெரிக்காவின் பொதுவான வரிவிகிதங்கள்படி இறக்குமதி செய்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபரின் உத்தரவில், எந்த ஒரு நாட்டையும் தனியாகக் குறிப்பிடவில்லை. ஆனால்  பொருட்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பட்டியலில் இந்தியா மிகப் பெரிய பயனாளியாக இருந்தது. இதனால் அதிபர் ட்ரம்பின் சமீபத்திய இந்த உத்தரவு  இந்தியாவுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

 இந்த ஜிஎஸ்பி விதிமுறை அமெரிக்க வர்த்தகத்தில்  மிகப் பழமையான, பெரிய அளவிலான வர்த்தகமாகும். இந்தப் பட்டியலை பயன்படுத்தும் நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் வரியில்லாமல் இறக்குமதி செய்யப்படுகின்றன.  அமெரிக்கபொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போதைய உத்தரவின்படி இந்தியாவிலிருந்து வரியில்லாமல் இறக்குமதியாகும் 50 பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். இதனைபயன்படுத்துவதில் இந்தியா மிக முக்கிய நாடாகும்.  இந்த ஜிஎஸ்பி விதிமுறையின் கீழ் 2017-ம் ஆண்டில்  இந்தியா வரியில்லாமல் ஏற்றுமதி  செய்துள்ள வர்த்தகத்தின் மதிப்பு 560 கோடி டாலராகும்.

அமெரிக்காவுக்கான  வரி இல்லாத ஏற்றுமதி காரணமாக இந்திய சிறு குறு நிறுவனங்கள் தங்களது கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தன. தற்போது வரி விதிப்புக்குள் வருவதால் இவர்களுக்கு பாதிப்புகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close