[X] Close

ஹேப்பி ஹாலோவீன்.. ஆனால் சிலர் நடிப்பதில்லை!- ட்ரம்ப்பை கலாய்த்த ஜிம் கேரி


some-people-aren-t-pretending-to-be-monsters-happy-halloween

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Nov, 2018 12:02 pm
  • அ+ அ-

தி மாஸ்க் திரைப்பட புகழ் நடிகர் ஜிம் கேரி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கிண்டல் செய்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிாிழந்த முன்னோா்களை நினைவுக்கூறும் விதமாக ஹாலோவீன் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். தற்போது அமெரிக்காவில் ஹாலோவின் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மக்கள் அனைவரும் அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வேடமணிந்து இடம் பெறுவர்.

இந்நிலையில், நடிகர் ஜிம் கேரி தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கேலிச் சித்திரத்தைப் பகிர்ந்து சிலர் அச்சுறுத்தும் பூதம் போல் பாசாங்கு செய்வதில்லை எனப் பதிவிட்டிருக்கிறார். ட்ரம்பின் புகைப்படத்துக்கு ஒற்றைக் கண் மட்டுமே வரையப்பட்டிருக்கிறது. 
ஜிம் கேரியின் இந்தப் பதிவை பலரும் விரும்பி ரீட்வீட் செய்து வருகின்றனர். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close