[X] Close
 

உங்களுக்கு 31 வயதாகிறதா?- அப்படியென்றால் நீங்கள் அதிகமாக செலவழிக்கும் வயதுவந்துவிட்டது என்கிறது ஓர் ஆய்வு


31-is-the-most-expensive-age-of-your-life-reveals-survey

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Mar, 2018 15:14 pm
  • அ+ அ-

உங்களுக்கு 31 வயதாகிறதா? அப்படியென்றால் நீங்கள் அதிகமாக செலவழிக்கும் வயதுவந்துவிட்டது என்கிறது ஓர் ஆய்வு. 30 வயது இளமைக் காலங்களுக்கு பைபை சொல்லும் நேரமது. உங்களை பொறுப்புகள் ஆட்கொள்ளும் நேரமது.

அதனால், செலவுகளும் அதிகம் துரத்தும் காலகட்டம் அதுதான் என அந்த ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது.


க்ளியர் ஸ்கோர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.


இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 31 வயதை எட்டிய பலரும் தாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய செலவு திருமணத்துக்கானது என்று கூறியுள்ளனர். 27% பேர் இதைத் தெரிவித்துள்ளனர்.


25% பேர் சொந்த வீடு வாங்குவது/ கட்டுவதே 31 வயதில் மிகப்பெரிய செலவு எனக் கூறியுள்ளனர்.


20% பேர் குழந்தைப் பேறுக்காக அதிகமாக செலவழிப்பதாகக் கூறுகின்றனர்.


14% பேர், ஹனிமூன் செல்வதற்காக இந்த காலகட்டத்தில் அதிகம் செலவழிப்பதாகக் கூறுகின்றனர்.
அதேவேளையில் 33% பேர் தாங்கள் இன்னமும் தங்கள் பெற்றோரை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

 

ஏஎன்ஐ



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close