[X] Close

இஸ்லாம் மதத்துக்கு எதிராக பேசிய புகார்: அசியாவுக்கு மரண தண்டனை ரத்து; பாகிஸ்தானில் கலவரம், வன்முறை


blasphemy-case-pakistan-supreme-court-overturns-asia-bibi-s-death-sentence

  • நெல்லை ஜனா
  • Posted: 31 Oct, 2018 17:51 pm
  • அ+ அ-

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் மத நிந்தனை செய்த புகாருக்கு ஆளான அசியா பீவிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் பெரும் வன்முறை சம்பவங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றன.

பாகிஸ்தானில் மத்திய பகுதியைச் சேர்ந்த இதான் வாலி கிராமத்தைச் சேர்ந்தவர் அசியா பீவி. கிறிஸ்தவரான அவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு பக்கத்து வீட்டு பெண்ணுடன் தண்ணீர் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டது. சாதாரணமாக தொடங்கிய சண்டை பெரும் மோதலானது. அப்போது அவர் இஸ்லாம் மதம் குறித்தும், முகமது நபி பற்றியும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த புகாரை அவர் முற்றிலுமாக மறுத்தார். தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்குவதாக அவர் கூறினார். பாகிஸ்தான் சட்டத்தின்படி இதற்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை விதிக்கப்படும். இதையடுத்து, அசியா பீவி கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது.

2010-ம் ஆண்டு அவருக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. 8 ஆண்டுகளாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். அசியா பீவியின் கணவர் மற்றும் மகள் போப்பாண்டவரை சந்தித்து பேசினர்.

இதன் பிறகு கிறிஸ்தவ திருச்சபைகளும் ஆசியா பீவிக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இதனை எதிர்த்து ஆசியா பீவி சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அசியா பீபியை விடுதலை செய்வதுடன் அவர் மீது வேறு வகையில் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தகவல் வெளியானதும், பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close