[X] Close

ஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவுபடுத்த ஃபேஸ்புக் திட்டம்


facebook-wants-to-go-big-with-stories

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 31 Oct, 2018 16:03 pm
  • அ+ அ-

ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீடை விட, ஸ்டோரிஸ் வசதியை இன்னும் விரிவாக்க அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். 

நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கூட்டத்தில் மார்க் ஸக்கர்பெர்க், ஸ்டோரிஸ் வசதியை விரிவுபடுத்துவது ஃபேஸ்புக்கின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசியுள்ளார். 

ஸ்னாப்சாட்டில் இருந்த ஸ்டோரிஸ் வசதி தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும், வாட்ஸப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பேஸ்புக் செயலியில் இந்த ஸ்டோரிஸ் வசது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது எதிர்காலத்தில் ஸ்டோரிஸ், நியூஸ் ஃபீடை விட பிரபலமாகும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

முதலீட்டாளர்களைப் பொருத்தவரை, என்ன செய்தாலும் சரி தான். ஆனால் ஸ்டோரிஸ் மூலமாக எப்படி வருவாய் வரும் என்பதே கவலை. ஆனால் மார்க்கை பொருத்தவரை, நியூஸ் ஃபீடில் வரும் விளம்பரங்களைப் போலவே ஸ்டோரிஸில் வரும் விளம்பரங்களும் நன்றாக சென்றடையும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close