[X] Close

அமெரிக்காவில் பிரார்த்தனை கூட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் பலி: அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆவேசம்; மக்கள் கண்ணீர் அஞ்சலி


shooting-at-america-11-peoples-killed

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில், மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள். படம்: ஏஎப்பி

  • kamadenu
  • Posted: 29 Oct, 2018 08:20 am
  • அ+ அ-

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில், மர்ம நபர் திடீரென சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். போலீஸார் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் பென்சில் வேனியா மாகாணத்தில் உள்ளது பிட்ஸ்பர்க் நகரம். இங்குள்ள ஸ்குருகில் ஹில் பகுதியில் யூத மதத்தினரின் வழிபாட்டு தலம் (ட்ரி ஆஃப் லைப்) உள்ளது. இங்கு பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற் றது. இதில் ஏராளமான யூதர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது மர்ம நபர் ஒருவர் திடீரென வழிபாட்டு கூடத் துக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். ‘யூதர்கள் எல்லோரும் சாக வேண்டும்’ என்று ஆவேசமாக கூச்சலிட்டபடி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாயினர். விரைந்து வந்த போலீஸார் மர்ம நபரை சுட்டுப் பிடிக்க முயன்றனர். அதில் குண்டு பாய்ந்து அந்த நபர் காயம் அடைந்தார். பின்னர் அவராகவே சரணடைந்தார். இந்தச் சண்டையில் நான்கு போலீஸார் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பெயர் ராபர்ட் போவர்ஸ் (46) என்று தெரிய வந்துள்ளது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனவெறி யால் துப்பாக்கிச் சூடு நடத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், உயிரிழந்தவர் களுக்கு உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தகவல் அறிந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘யூத அமெரிக்கர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தது, அமெரிக்கர்கள் அனைவரின் இதயத்திலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதல் நம் அனைவர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். மனித இனத்தின் மீது நடந்த தாக்குதல். இந்த உலகத்தை இனவெறியில் இருந்து மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என்று ஆவேசமாகக் கூறினார்.

மேலும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிபரின் வெள்ளை மாளிகை மற்றும் அரசு கட்டிடங்களில் தேசிய கொடியை 31-ம் தேதி வரை அரைக் கம்பத்தில் பறக்கவிட ட்ரம்ப் உத்தரவிட்டார். 

- பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close