[X] Close

பாலியல் அத்துமீறல்களுக்காக 48 ஊழியர்கள் பணி நீக்கம்!- ஊடக புகாரும் சுந்தர் பிச்சை கடிதமும்


google-reveals-48-employees-fired-for-sexual-harassment

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Oct, 2018 15:03 pm
  • அ+ அ-

கூகுள் நிறுவனம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனது நிர்வாகிகளைப் பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சுந்தர் பிச்சை, தனது ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையில், கூகுள் நிறுவனம் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு  ஆளான அதன் முக்கிய நிர்வாகிகளைப்  பாதுகாப்பதாகவும், அவர்கள் தாமாகவே பணியில் இருந்து விலக அதிக அளவில் பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில், ந்தர் பிச்சை, தனது ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், கூகுள் நிறுவனம் பாலியல் புகார்களை கடுமையாக பரிசீலிப்பதாகவும் பாலியல் அத்துமீறல்களுக்காக 48 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இ மெயில் விவரம்:
"அனைவருக்கும் வணக்கம்.  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையைப் படிக்கக்  கனமாக இருந்தது. கூகுள் நிறுவனத்தில்  பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்க உறுதி கொண்டுள்ளோம். 

பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது மோசமான நடத்தைகுறித்து வரும் ஒவ்வொரு புகாரும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு  காரணமாக  48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்  13 பேர் சீனியர் மேனேஜர் மற்றும் அதற்கு மேலான பதவிகளில் இருந்தவர்கள். 

அதிகாரத்தில் இருப்பவர்களின் மோசமான நடத்தையைத்  தடுப்பதற்காக பல்வேறு மாற்றங்களைச்  செய்துவருகிறோம். பாலியல் புகாரில் வேலையைவிட்டு அனுப்பப்பட்டவர்கள் ஒருவருக்கும் தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

நீங்கள் சந்தித்த அல்லது சந்திக்கும் மோசமான நடத்தைகளைப்  பாதுகாப்பான முறையில் எங்களுக்குத்  தெரிவிக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களின் அடையாளத்தைத் தெரிவிக்காமல்கூட புகார் தரலாம்.

நிறுவனத்தில் தவறாக நடப்பவர்கள் நிச்சயம் மோசமான விளைவுகளைச்  சந்திப்பார்கள். கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close