[X] Close

ஜமால் கொலை வழக்கு:  சவுதிக்கு பொருளாதாரத் தடை? -அச்சுறுத்தும் பிரான்ஸ் 


france-threatens-sanctions-on-saudi-arabia

கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால்

  • இந்து குணசேகர்
  • Posted: 25 Oct, 2018 17:32 pm
  • அ+ அ-

 

ஜமால் கொலையின் பின்னணியில் சவுதி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று  பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் கூறும்போது, "ஜமாலின் மரணம் தொடர்பாக நடந்த் விசாரணை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களது புலனாய்வு துறையினர் இந்த கொலையின் பின் சவுதி இருப்பதை உறுதி செய்தால் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். மேலும்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதும் நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜமால் கொலை   வழக்கில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் சவுதியை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஜமால்?

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில்  சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. மேலும் ஜமாலின் உடல் பாகங்கள் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி துதரக அதிகாரியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close