[X] Close

2013 ஆண்டு தகவல் திருட்டு சர்ச்சை: யாஹூவுக்கு 50 மில்லியன் டாலர் அபராதம்


yahoo-to-pay-usd-50-million-in-damages-over-2013-data-breach

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 25 Oct, 2018 15:37 pm
  • அ+ அ-

2013-14 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவத்துக்காக யாஹூ நிறுவனம் 50 மில்லியன் டாலர் தொகையை அபராதமாக கட்டவுள்ளது.

இந்த அபராதத்தோடு, குறைந்தது 2 வருடங்களுக்கு அந்த நிறுவனம் அதன் 200 மில்லியன் பயனர்களுக்கு கண்காணிப்பு சேவையை வழங்க வேண்டும்.

2013ல் நடந்த பாதுகாப்பு அத்துமீறலில் யாஹூவின் 3 பில்லியன் பயனர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டன. அதற்கு அடுத்த வருடம் நடந்த பிரச்சினையில் 500 மில்லியன் கணக்குகள் பாதிக்கப்பட்டன. ஹாக்கர்களின் இந்த செயல், என்க்ரிப்ட் செய்யப்பட்ட பாஸ்வேர்டுகளையும் பாதித்தது. 

இவ்வளவு பெரிய பாதுகாப்பு பிரச்சினையில், யாஹூ நிறுவனத்தின் அஜாக்கிரதையின் விலை 50 மில்லியன் டாலர்கள். இதை யாஹூவின் உரிமையாளரான வெரிசான் நிறுவனம் கட்டும். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close