[X] Close

ஒன்ப்ளஸ் 6டி மொபைலில் 3,700 mAh பேட்டரி, 8ஜிபி ரேம்


oneplus-6t-to-include-bigger-battery-in-display-fingerprint-sensor-report

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 14:40 pm
  • அ+ அ-

அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னரே ஒன் ப்ளஸ் 6டி மொபைல் மாடலைப் பற்றி தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து கசிந்து வருகின்றன. இந்த மொபைல் குறித்த எதிர்பார்ப்பும் வாடிக்கையாளரகளிடையே அதிகமாக இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் சந்தையில், ஆப்பிளின் ஐஃபோனுக்கு இணையான மதிப்பை ஒன் ப்ளஸ் மொபைல்கள் பெற்றுள்ளன. நல்ல அம்சங்களுடன் பேட்டரியும் நீடித்து உழைப்பதால், விலை அதிகமானாலும், ஒன் ப்ளஸ் பிரியர்கள் நம்மூரில் அதிகம்.

தற்போது ஒன் ப்ளஸ் மொபைலின் 6டி மாடல் பற்றி, ஜெர்மானிய விற்பனையாளர் தளம் ஒன்றில் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாடலில் 3,000 mAh என்றிருந்த பேட்டரி திறன், 6டி மாடலில் 3,700 mAh என அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.4 இன்ச் அகல அமோலெட் திரை, 128 ஜிபி கொள்ளளவு, 8ஜிபி ரேம், ஸ்னாப் ட்ராகன் 845 SoC ப்ராசஸர், ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இண்டர்ஃபேஸ் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் யுஎஸ்பி சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பின்பக்க கேமரா 16 மெகாபிக்ஸல் மற்றும் 20 மெகாபிக்ஸல் என லென்ஸ்களுடன், செல்ஃபி (முன்பக்க) கேமரா 16 மெகாபிக்ஸல் திறனும் கொண்டது.

நியூயார்க் நகரில் அக்டோபர் 29 அன்று அதிகாரப்பூர்வமாக ஒன்ப்ளஸ் 6டி விற்பனைக்கு வரும். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close