[X] Close
 

சிரியாவில் வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலி: 100-க்கும் மேற்பட்டோர் காயம்


air-strike-on-syria-s-eastern-ghouta-kills-12

கோப்புப் படம்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Mar, 2018 16:09 pm
  • அ+ அ-

சிரியாவில் கிழக்கு கவுட்டா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இத்தகவலைத் தெரிவித்துள்ளது.


ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. 


சிரியாவில் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசு கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளில் ரஷ்யாவின் உதவியுடன் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.


இதில் பெரிதளவும் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக  அந்நாட்டில் நடந்து வரும் உள் நாட்டுப் போரில் இதுவரை 3,40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close