விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார் ட்ரம்ப் மருமகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மருமகள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். ஜூனியர் டொனால்டு ட்ரம்பும் (ட்ரம்பின் மூத்த மனன்) - வெனேசா ஹேடனும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மான்ஹாட்டன் நகர நீதிமன்றத்தில் வெனேசா ஹேடன் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக தம்பதிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "12 ஆண்டுகளுக்குப் பின் நாங்கள் இருவரும் பிரிவதென்று ஒருமித்து முடிவு செய்துள்ளோம். இருவரும் பிரிந்தபின்னரும்கூட பரஸ்பர் ஒருவர் மீது மற்றொருவர் மரியாதையுடன் இருப்போம். எங்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் நலனே எங்களுக்கு இப்போது பிரதானமாக இருக்கிறது. எங்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.
வெனேஸா மாடல் அழகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.