[X] Close

இந்தோனேசியாவின் ‘கொடி காத்த குமரன்’ யோகனஸ்: 75 அடி கம்பத்தில் கயிறை சரி செய்தான்


great-work-by-yoganas

இந்தோனேசியாவின் அடம்புவா நகரில் நடந்த சுதந்திர தின விழாவின்போது எதிர்பாராதவிதமாக கொடிக் கயிறு அறுந்தது. உடனடியாக, 75 அடி உயர கம்பத்தின் உச்சிக்கு ஏறிய சிறுவன் யோகனஸ் ஜோனி காமா அறுந்த கயிறை கீழே கொண்டு வந்தான்.

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 09:17 am
  • அ+ அ-

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தின் காலனி நாடாக இருந்தது. கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தோனேசியா விடுதலை பெற்றது. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அந்த நாட்டின் 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்தோனேசியாவின் பெலு மாகாண தலைநகர் அடம்பு வாவில் அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அங் குள்ள 75 அடி உயர கொடிக் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றும்போது எதிர் பாராத விதமாக கொடிக் கயிறு அறுந்தது.

விழாவில் பங்கேற்ற 13 வயது மாணவன் யோகனஸ் ஜோனி காமா ஓடோடி வந்து சரசரவென்று கொடிக்கம்பத் தில் ஏறினான். உச்சிக்கு ஏறிய சிறுவன், அறுந்த கயிறை கையில் பிடித்தபடி கீழே சறுக்கியபடி இறங்கினான். அதன்பின்னர் பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற் றப்பட்டது.

சிறுவன் கொடிக் கம்பத்தில் ஏறும் வீடியோ இந்தோனேசியா முழுவதும் சமூக வலைதளங்களில் வைர லாக பரவியது.

அந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சிறுவன் யோகனஸ் ஜோனி காமாவை தனது மாளி கைக்கு வரவழைத்து கவுரவித் தார். அந்த சிறுவனிடம் என்ன வேண்டும் என்று அதிபர் கேட்டபோது குழந்தைத் தன மாக ஒரு மிதிவண்டி கேட்டான். சிறுவனுக்கு மிதிவண்டி, புதிய வீடு மற்றும் ரூ.2.5 கோடி ரொக்க பரிசு ஆகியவற்றை அதிபர் வழங்கினார்.

அதிபர் கூறியபோது, ‘‘நீ (யோகனஸ் ஜோனி காமா) கொடிக் கம்பத்தில் ஏறிய வீடி யோவை பார்த்தேன். அவ்வளவு உயர கம்பத்தில் ஏறுவது ஆபத் தானது’’ என்று கவலை தெரி வித்தார்.

சிறுவன் யோகனஸ் ஜோனி காமா கூறியபோது, ‘‘வயிற்று வலி காரணமாக அணிவகுப்பு மைதானத்தின் ஓரமாக படுத்திருந்தேன். திடீரென கொடிக் கயிறு அறுந்து யாராவது கம்பத்தில் ஏற முடியுமா என்று குரல் கேட்டது. உடனே ஓடோடி சென்று கம்பத்தில் ஏறிவிட்டேன்’’ என் றான்.

இந்தோனேசிய மக்கள், சிறுவன் ஜோனியை, 'கொடிக் காத்த குமரன்' என்ற பெருமிதத் துடன் அழைக்கின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close