[X] Close

சபரிமலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதால் டிஸ்மிஸ்: சவுதியில் பணியாற்றியவர் மீது நடவடிக்கை


sabarimala-judgement-creates-issue-in-saudi

தீபக் - படம்: பேஸ்புக்

  • kamadenu
  • Posted: 18 Oct, 2018 17:47 pm
  • அ+ அ-

சபரிமலை விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்ட சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பயன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சபரிமலை விவகாரத்தில் அவதூறு பரப்பும் விதமாக வீடியோ பதிவிட்ட நபர் சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள லூலு நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருபவர் தீபக் பவித்திரன். கேரளாவைச் சேர்ந்த இவர் சபரிமலை விவகாரம் தொடர்பாக பெண்களை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தகவல் தெரிந்ததும் அந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து லூலு நிறுவனத்தனி் தகவல் தொடர்பு அதிகாரி நந்தகுமார் கூறுகையில் ‘‘மத உணர்வுகள் புண்படும் விதமாக எங்கள் ஊழியர்கள் செயல்படுவதை ஏற்க முடியாது. சமூகவலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். எனவே அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளோம்’’ எனக் கூறினார்.

இதே நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் பற்றி அவதூறாக சமூகவலைதளங்களில் பதிவிட்டதற்காக நீக்கப்பட்டார். அதுபோலவே கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை பற்றி கிண்டல் செய்து பதவிட்ட ஊழியரையும் லூலு நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close