[X] Close

500 இன்டர்னல் சர்வர் எரர்!- முடங்கிய யூடியூப்; பதறிய நெட்டிசன்கள்


youtube-back-after-reports-of-outage

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Oct, 2018 09:58 am
  • அ+ அ-

உலகளவில் யூடியூப் சேவை இன்று (புதன்கிழமை) காலை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் நெட்டிசன்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

யூடியூபை நாடியவர்களுக்கு திரையில் 500 இன்டர்னல் சர்வர் எரர் என்ற தகவல் மட்டுமே தெரிந்தது. 

இன்று காலை முதல் யூடியூப், யூடியூப் டிவி மற்றும் யூடியூப் இசை சேவை ஆகியவை திடீரென பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, யூடியூப்-பில் தொழில்நுட்ப கோலாறு ஏற்பட்டுள்ளதாகவும், அது உயர்நுட்ப வல்லுநர் குழு சரி செய்துகொண்டிருப்பதாகவும் யூடியூப் நிறுவனமே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தது,
இணையவாசிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்தது.

அவர்கள் சொன்னதைப் போல் சில நிமிடங்களில் பிரச்சினை சீர் செய்யப்பட்டது. பிரச்சினை சரி செய்யப்பட்டது குறித்து, "நாங்கள் மீண்டும் இயங்குகிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி. பிரச்சினைகள் தெரியவந்தால் எங்களுக்கு உடனே தெரியப்படுத்தவும்" எனப் பதிவிட்டனர்.

ட்விட்டரில் #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close