[X] Close

வெள்ளை மாளிகையில் ஓர் ஓவியம்; அதில் முன்னாள் அதிபர்களுடன் ட்ரம்ப்!- ட்விட்டரில் குவியும் விமர்சனம்


trump-mocked-over-white-house-painting

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Oct, 2018 13:48 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வைத்து வரையப்படும் கேலி சித்திரங்களுக்கு அளவே இல்லை. ட்ரம்ப் என்றாலே இணைய உலகில் வரிசை கட்டி கொண்டு கலாய்க்க பெருங்கூட்டமே இருக்கிறது.

அப்படித்தான் வெள்ளை மாளிகையில் இருந்த ஒரு ஓவியம் வெளியாக அதைவைத்தே ட்ரம்பை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
லெஸ்லி ஸ்டால் என்ற பத்திரிகையாளர் அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் நேர்காணல் செய்தார். அப்போது, அங்கு ஒரு சுவரில் இருந்த ஓவியம் ட்விட்டரில் வெளியானது.

அந்த ஓவியத்தின் மேல் 'The Republican Club' தி ரிபப்ளிக்கன் கிளப் என எழுதப்பட்டிருந்தது. ஓவியத்தில் ஆப்ரஹாம் லிங்கன், டெட்டி ரூஸ்வெல்ட், ரொனால்ட் ரீகன், ஜெரால்ட் ஃபோர்ட், ட்விட் எய்ஸன்ஹோவர், ரிச்சர்ட் நிக்சன், கேல்வின் கூலிட்ஜ், ஜார்ஜ் சீனியர் புஷ், ஜார்ஜ் ஜூனியர் புஷ் மற்றும் வாரன் ஹார்டிங் ஆகியோர் தீட்டப்பட்டிருந்தனர். அவர்களுடன் ட்ரம்பும் அமர்ந்திருப்பது போல் முழு ஓவியம் காட்சியளிக்கிறது.

ட்ரம்ப் தான் மது அருந்துவதில்லை எனக் கூறியிருக்கிறார். அதனால் அவர் முன் மட்டும் கோக் அடங்கிய கோப்பை வரையப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தை வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்பை இணையவாசிகள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ஒரு பதிவர், அந்தப் புகைப்படத்தைப் போட்டு, "லிங்கன் கலாய்த்ததை பாராட்டு என கருதி அமர்ந்திருக்கும் ட்ரம்ப். அதை புரிந்து கொண்டு சுற்றி நின்று சிரிக்கும் மற்றவர்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அமெரிக்க முன்னாள் அதிபர்களுடன் சமமாக அமர்ந்திருப்பதுபோன்ற ட்ரம்ப் ஓவியத்தை ஏற்றுக் கொள்ள இயலாமலேயே இணையவாசிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close