[X] Close

கள்ளத்தனமாக ப்ளே ஸ்டேஷன் கருவிகளை விற்றவர் மீது சோனி நிறுவனம் வழக்கு


sony-sues-ps4-seller

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 15 Oct, 2018 15:15 pm
  • அ+ அ-

ஈபே இணையதளத்தில் கள்ளத்தனமாக ப்ளே ஸ்டேஷன் கருவிகளை விற்ற எரிக் சேல்ஸ் என்பவர் மீது சோனி நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

கலிஃபோர்னியா நகரைச் சேர்ந்த எரிக், பிஎஸ்4 கருவிகளை கள்ளத்தனமாக விற்றதோடு, அதில் 60க்கும் மேற்பட்ட கேம்களை சட்டவிரோதமாக இன்ஸ்டால் செய்து விற்றுள்ளார். பதிப்புரிமை மீறல் மற்றும் பிஎஸ்4 கருவிகளின் பாதுகாப்பு அம்சங்களை கையாளுதல் ஆகிய புகார்களை சோனி எரிக் மீது தொடுத்துள்ளது. கேம்ஸ் வாங்குவதை நிறுத்துங்கள் என எரிக் மக்களிடம் கூறி வந்ததாகவும் தெரிகிறது. 

கள்ளத்தனமாக விற்கப்பட்டும் பிளே ஸ்டேஷன் கருவிகளை ஜெயில் பிரெக் கருவிகள் என்று அழைப்பார்கள். ஜெயில் பிரேக் செய்யப்பட்ட சாதனங்களில் ஒரிஜினல் கேம்களை விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பைரட் செய்யப்பட்ட விளையாட்டுகளை, குறைந்த விலையில் வாங்கி விளையாடலாம். ஆனால் இந்த கருவிகளை அப்டேட் செய்ய இயலாது. ஆன்லைன் விளையாடுகளையும் ஆட முடியாது.

எரிக்கிடம் நஷ்ட ஈடாக பல ஆயிரம் டாலர்கள் கோரப்படும் என்று தெரிகிறது. 

- ஏ.என்.ஐ
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close