[X] Close

ஹாக்கர்களின் 'கை வண்ணத்தில்' ரூ.143 கோடியை பறிகொடுத்த மொரீஷியஸ் வங்கி


hackers-incident

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 18:36 pm
  • அ+ அ-

ஸ்டேட் பாங்க் ஆஃப் மொரீஷியஸ் வங்கியிலிருந்து, ஹாக்கர்கள் ரூ.143 கோடியை திருடியுள்ளனர். மும்பை நரிமான் பாய்ண்ட் கிளையில் இந்த சம்பவம் நடந்ததாக வங்கி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வங்கியின் சர்வர்களை ஹாக் செய்த ஹைடெக் திருடர்கள், பல்வேறு கணக்குகளில் கைவைத்து, இந்தியாவுக்கு வெளியே இயங்கும் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 143 கோடி வரை பணம் மாற்றியுள்ளனர். 

சைபர் கிரைம் பிரிவு இது மால்வேர் தாக்குதலா என்று விசாரித்து வருகிறது. வங்கியின் சாரிபிலும் யார் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது. 

ஸ்டேட் பேங்க் ஆஃப் மொரீஷிய்ஸுக்கு மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் ராமச்சந்திரபுரம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன.  கடந்த சில மாதங்களுக்கு முன் மாகாராஷ்டிர வங்கியில் இதே போன்ற சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம், காஸ்மோஸ் தனியார் வங்கியில் நடந்த சைபர் தாக்குதலில் ரூ. 94 கோடி வரை அந்த வங்கிக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் ஒரு ஹாக்கர் குழுவே செய்ததாகத் தெரிகிறது. 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close