[X] Close

இன்ஸ்டாகிராமில் குழந்தையை விற்க முயன்ற தாய் கைது!


indonesia-women-tries-to-sell-kid

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Oct, 2018 13:57 pm
  • அ+ அ-

அண்மையில் இ பேயில் காதலியை விற்க பட்டியலிட்ட காதலனைப் பற்றிய செய்தி வெளியானது தற்போது இன்ஸ்டாகிராமில் குழந்தையை விற்க முயன்ற தாய் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்தோனேஷியாவில் ஒரு தாய் தனது 11 மாத குழந்தையை இன்ஸ்டாகிராம் மூலம் விற்க முயன்றதை அந்நாட்டு காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை தத்தெடுக்கும் ஒரு அமைப்பின் அக்கவுண்டில் பல குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளன. அதில் ஒருசில புகைப்படங்கள் கருவில் இருக்கும் சிசுவின் ஸ்கேன் படங்கள். இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த நிறுவனத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தத்தெடுக்க உதவும் அமைப்பு என்ற பெயரில் குழந்தைகளை விற்பனை செய்யும் தொழிலை அந்நிறுவனம் செய்து வருவதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அந்நிறுவனத்தின் ஆவணங்களை சோதனை செய்தபோது, தாய் ஒருவர் 11 மாத குழந்தையை ரூ.72 ஆயிரத்திற்கு விற்க முன்வந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தாய் மற்றும் புரோக்கர்களை போலீஸார் கைது செய்தனர்.  

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close