[X] Close

பரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 பக்கங்களை முடக்கியது ஃபேஸ்புக்


facebook-says-it-purged-more-than-800-spam-accounts-pages

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Oct, 2018 10:23 am
  • அ+ அ-

பரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 ஃபேஸ்புக் பக்கங்களை நீக்கியுள்ளது அந்நிறுவனம். இவை அனைத்தும் அமெரிக்காவில் இருந்து இயக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டது. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்டது.

இந்நிலையில், தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் பரபரப்பு அரசியல் பதிவுகள் கொண்ட 800 பக்கங்களை முடக்கியுள்ளது. இந்த கணக்குள் ஃபேஸ்புக் பயனாளர்களை விளம்பரம் நிறைந்த மற்ற இணைய பக்கங்களுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருந்ததால் அவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. மேலும் இவையெல்லாம் போலி கணக்குகள் ஃபேக் ஐடி கொண்டவை என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாது.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் தன்மை கொண்ட பக்கங்களை ஃபேஸ்புக் முடக்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close