[X] Close

நானே எனக்கு துணையானவள்!- இதுதான் சோலோகேமி


woman-marries-herself-to-get-parents-off-her-back

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 16:23 pm
  • அ+ அ-

திருமணங்கள் பல பரிமான வளர்ச்சியைக் கண்டுவிட்டன தன் பாலின உறவாளர்கள் திருமணம், மூன்றாம் பாலினத்தவருடன் திருமணம் என்றெல்லாம் உரு மாறிவிட்டன.

இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பது சோலோகேமி. அதாவது தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது.
இப்படி ஒரு திருமணம் அண்மையில் நடந்திருக்கிறது. லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் லூலூ ஜெமியா என்ற 32 வயது இளம் பெண்ணை அவரது பெற்றோர் சீக்கிரம் மனவாழ்வில் இணையும்படி வற்புறுத்தியிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் பெற்றோரின் நச்சரிப்பை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போயிருக்கிறது. இதனால், அவர் தன்னைத்தானே திருமணம் செய்ததாக அறிவித்தார். 

மணப்பெண் போல் தன்னை அலங்கரித்த அவர் தனது ட்விட்டரில், "அதிகாரபூர்வமாக திருமணம் முடிந்துவிட்டது. ஒரே மணப்பெண்.. ஒரே இலக்கு. எனது 32-வது பிறந்தநாளில் நான் என்னை நன்றாக கவனித்துக் கொள்ளும் என்னையே திருமணம் செய்து கொண்டுள்ளேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஜெமியாவின் முடிவை அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இணைய உலகம் ஜெமியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close