[X] Close

அப்பாவுக்கும் மகளுக்கும் அப்படி ஒரு லிப் சின்க்: வைரல் வீடியோ


father-daughter-bonds-are-always-special

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 15:17 pm
  • அ+ அ-

மகள்களுக்கும் அப்பாவுக்கும் தான் எப்பவுமே மனம் ஒத்துப்போகும்.

அதனால்தானா என்னவோ மகள்கள் அப்பா செல்லங்களாக இருப்பார்கள்.
அப்படி மனம் ஒத்த தந்தையின் பாட்டுக்கு லிப் மூவ்மென்ட் கொடுத்து அசத்தியிருக்கும் குட்டி சுட்டிப் பாப்பாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல பாப் பாடல் ஒன்றை தந்தை பாட குட்டிப் பாப்பா தந்தையின் வார்த்தைகளுக்கு வாய் மட்டும் அசைக்கிறார். ஆனால், அது சிறப்பாக பொருந்தியிருக்கிறது.

அலட்டிக் கொள்ளாத நடனம், சிறு சிறு புன்னகைகள் என அழகாக இருக்கிறது அந்த வீடியோ. இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். இன்றைய தினம் இந்த ஒரு வீடியோ போதும் ஆனந்த யாழை மீட்டுபவள் மகள் என்பதைக் கூற.

இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கும் தந்தையும் மகளும் பிரபலங்கள் இல்லை. ஆனால், இந்த வீடியோ வைரலானதில் இருந்து பிரபலமாகிவிட்டனர்.

நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்..

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close