[X] Close

மீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ பிரச்சாரத்தை தொடங்கிய தாய்!- முடிவு கட்டிய மகன்


i-will-never-support-himtoo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Oct, 2018 16:38 pm
  • அ+ அ-

மீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ என்ற பிரச்சாரத்தை அமெரிக்க பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். ஆனால், அது தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணின் மகனாலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்நிலையில், இந்தியாவிலும் மீ டூ  இயக்கம் வலுப்பெற்று வருகிறது.  

இத்தகைய சூழலில்தான் மீ டூ இயக்கத்துக்கு எதிராக ஹிம் டூ என்ற பிரச்சாரத்தை அமெரிக்க பெண் ஒருவர் தொடங்கியுள்ளார். ஆனால், அது தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணின் மகனே முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், "இவர்தான் என் மகன். இவர் யூ.எஸ்.ஒ விருது பெற்றவர். பெண்களை மதிக்கும் ஜென்டில்மேன். ஆண்களை எப்போது பாலியல் குற்றச்சாட்டு வலைக்குள் சிக்கவைக்கலாம் எனக் காத்திருக்கும் தீவிர பெண்ணியவாதிகள் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவன் யாருடனும் தனியாக டேட்டிங் செல்லமாட்டான். #HimToo-வுக்கு நான் வாக்களிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த போஸ்ட் வைரலானது. ஆனால், அந்தப் பெண்ணின் மகன் பீட்டருக்கு இது குறித்து எதுவும் தெரியாது. அவர் ட்விட்டரிலும் இல்லை. தனது சகோதரர் மூலம் தாய் தொடங்கிய பிரச்சாரத்தைத் தெரிந்துகொண்ட பீட்டர் ட்விட்டரில் இணைந்தார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அந்த ட்வீட்டை பதிவிட்டது எனது தாய். நமக்கு நெருக்கமானவர்களே நிறைய நேரம் நம்மை வேதனைப்படுத்துவார்கள். நாம் அதை கடந்து செல்ல வேண்டும். நான் பெண்களை மதிக்கிறேன். அவர்களை நம்புகிறேன். ஒருபோதும் ஹிம் டூவை ஆதரிக்க மாட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close