[X] Close

மர்லின் மன்றோவின் ரசிகரா ஸ்டீபன் ஹாக்கிங்?


stephen-hawkings-was-marlin-munroe-fan

  • kamadenu
  • Posted: 14 Mar, 2018 16:59 pm
  • அ+ அ-

அறிவியல் உலகில் நவீன  ஐன்ஸ்டின் என்று அழைக்கப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்த பாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் தீவிர ரசிகரகாக இருந்திருக்கிறார்.

பெரும்பாலும் விஞ்ஞானிகள் என்றால் 24 மணி  நேரமும் தங்களது ஆராய்ச்சிகளை பற்றி தீவிர சிந்தனைக் கொண்டவர்களாகவும், பொழுதுபோக்கு  நிகழ்ச்சிகளிலிருந்து தங்களை துண்டித்து கொண்டவர்களாகவும் இருந்திருப்பர்.

ஆனால் மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் ஹாலிவுட் நடிடை மர்லின் மன்றோவின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார்.

இது பற்றி ஹாக்கிங்கே ஒளியின் வேகத்தை விடவும் வேகமாக மனிதன் செல்ல முடிந்தால் அப்பயணம் பின்னோக்கியதாக இருக்கும் என்பதை பற்றிய விவாதித்தபோது ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.

அப்போது ஹாக்கிங் கூறியதாவது, பின்னோக்கிப் பயணிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் நியூட்டனை விடவும் மர்லின் மன்றோவைச் சந்திப்பதிலேயே சந்தோஷப்படுவேன்” என்றார். மேலும் ஹாக்கிங் தனது  வரவேற்பறையில் அவர் மாட்டியிருக்கும் நிழற்படம் மர்லின் மன்றோவுடையதுதான். கார்மீது மர்லின் மன்றோ சாய்ந்திருக்க அதன் முன் ஹாக்கிங் நின்று கொண்டிருப்பது போல வடிவமைக்கப்பட்ட புகைப்படம் அது.

அதுமட்டுமல்லாது சிறந்த நகைச்சுவை உணர்வுமிக்கவராக ஸ்டீபன் ஹாக்கிங் இருந்தார்.

ஒருமுறை ஹாக்கிங் டோனி பிளேயர் குறித்து பேசும்போது, “மத்திய நரம்பு மண்டலப் பாதிப்பைக் கண்டறியும் முன்புவரை வாழ்க்கையில் எனக்குப் பல தெரிவுகள் இருந்தன. அவற்றில் ஒன்று அரசியல் தலைவராவது;

என்னால் பிரட்டீஷ் பிரதமராக ஆகியிருக்க முடியும், எனினும் அப்பதவியை நான் டோனி பிளேயருக்கு விட்டுவிட்டதில் சந்தோசப்படுகிறேன். அவரைவிடவும் நான் நிறையவே பணியில் நிறைவடைகிறேன். மற்றும் என் பணி நீண்டதாக இருக்கும் வாய்ப்புள்ளது”. என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

வெறும் விஞ்ஞானியாக மட்டுமில்லாது அறிவியலில் நார்த்திகம் பேசி, அதன் சிந்தாந்தகளை மக்களிடம் எளிமையாக கொண்டு சென்ற 21 ம் நூற்றாண்டின் ஒப்பற்ற படைப்பாளி என்பதில் மாற்று கருத்தில்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close