[X] Close

காதலியை இ பே-யில் ஏலம் விட்ட நபர்!- ஏலத் தொகையால் அதிர்ந்து போனார்


man-lists-used-girlfriend-for-sale-on-ebay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Oct, 2018 13:24 pm
  • அ+ அ-

லண்டன் நகரைச் சேர்ந்த டேல் லீக்ஸ் என்பவர் விளையாட்டாக தனது காதலியின் புகைப்படத்தை இ பே தளத்தில் பதிவேற்றி ஏலம் விட எகிறிய ஏலத் தொகையைப் பார்த்து தற்போது அவர் வாய் பிளந்து நிற்கிறார்.

இது குறித்து லண்டனின் சிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, டேல் லீக்ஸ் தனது காதலி கெல்லி க்ரீவ்ஸ் புகைப்படத்தைப் பகிர்ந்து அவரது வயதையும் குறிப்பிட்டு அத்துடன் அவரது குணநலன்கள் சிலவற்றையும் பட்டியலிட்டுள்ளார். மேலும் ஒருமுறை விற்பனை செய்யப்பட்ட பொருள் மீண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விளம்பரத்தை இ பே நிறுவனம் 24 மணி நேரத்தில் நீக்கிவிட்டது. ஆனால், இணைய உலகில் அதற்குள் அந்த விளம்பரத்தை 81,000 பேர் பார்த்துவிட்டனர். மேலும் ஏலத் தொகையும் $119,000 என்றளவுக்கு எகிறியது. இதனால் லீக்ஸ் ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறார். 
இது குறித்து செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய லீக்ஸ், "விளையாட்டாகத்தான் அப்படி செய்தேன். க்ரீவ்ஸை என்னால் பிரிய முடியாது" என்றார்.

இருப்பினும், ஒரு பெண்ணை இழிவுபடுத்தியதாக லீக்ஸை பெண்கள் அமைப்பினர் கடுமையாக சாடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close