[X] Close

தகவல் திருட்டு எதிரொலி; கூகுள் பிளஸ் விரைவில் நிரந்தர மூடல்


alphabet-shuts-google-plus-after-user-data-exposed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Oct, 2018 09:51 am
  • அ+ அ-

கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, செய்தி வெளியானதைத் தொடர்ந்து அந்த சமூக வலைதளத்தை மூடுவதாக கூகுள் அறிவித்துள்ளது.

உலகின் பிரபல தேடுபொறி நிறுவனம் கூகுள். ஆலபபெட் இன்க் குழுமத்தின் அங்கம் இது. நெட்டிசன்களால் கூகுள் ஆண்டவர் எனக் கொண்டாடப்படும் அந்த தேடுபொறி அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தேடுபொறி மட்டுமல்லாது பல்வேறு வகையான வசதிகளையும் நிர்வகித்து வருகிறது கூகுள். கடந்த 2011-ம் ஆண்டு கூகுள் பிளஸ் வலைதளம் தொடங்கப்பட்டது. ஆனால், ஃபேஸ்புக்குக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில்தான் கூகுள் பிளஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியானது.  இதனையடுத்து கூகுள் பிளஸ் சமூகவலைதளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

500,000-க்கும் மேற்பட்ட கூகுள் பிளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "கூகுள் பிளஸ் உருவாக்கம் மற்றும் பராமரித்தலில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாலும், பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாத காரணம் மற்றும் மிகக் குறைவான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

எனினும், ஆகஸ்ட் மாதம் வரை கூகுள் ப்ளஸ் கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் 10 மாதங்களுக்குள் பயனர்கள் தங்களது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.   

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close