[X] Close

உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?


world-happiness-index-2018-finland-tops

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Mar, 2018 15:21 pm
  • அ+ அ-

2018-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.நா.சபை கடந்த 2012-ல் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் தொலைதொடர்பு (எஸ்டிஎஸ்என்) என்ற அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு சார்பில் 2018-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடு எது? என்ற ஆய்வு நடத்தப்பட்டது. 
156 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு நாட்டு மக்களின் சராசரி வாழ்நாள் எவ்வளவு, அந்நாட்டில் சமூக ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது, ஊழலற்ற நாடாக அது இருக்கிறதா? என்பனவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடு எது என்பது கணக்கிடப்படுகிறது.


ஆனால், இந்த அளவீடுகளையும் தாண்டி இந்த ஆண்டு ஒரு நாட்டிலுள்ள குடியேறிகளின் நலனும் அவர்களது மகிழ்ச்சியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


அந்த வகையில் பின்லாந்து உலகிலேயே மிக மகிழ்ச்சியான நாடு என்ற முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்தில் 3 லட்சம் வெளிநாட்டவர் உள்ளனர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.5 மில்லியன். பின்லாந்தில் ஐரோப்பிய நாட்டவர் அதிகமாக குடியேறிகளாக உள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான், சீனா, இராக், சோமாலியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்களும் கனிசமாக உள்ளனர்.


டாப் 10 நாடுகள்:
1. பின்லாந்து
2. நார்வே
3.டென்மார்க்
4. ஐஸ்லாந்து
5. ஸ்விட்சர்லாந்து
6. நெதர்லாந்து
7. கனடா
8. நியூசிலாந்து
9. ஸ்வீடன்
10. ஆஸ்திரேலியா


இதில் முதல் ஐந்து இடங்களை ஸ்கேண்டினேவியன் நாடுகள் பிடித்துள்ளன.


2018 உலகின் மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கை குறித்து அதன் இணை ஆசிரியர் ஜான் ஹெல்லிவெல் கூறும்போது, "உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் 10 இடங்களைப் பிடித்து நாடுகளிலும் அதன் மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. அதேபோல், அங்கு குடியேறியவர்களின் மகிழ்ச்சியின் அளவு குடிமக்களின் மகிழ்ச்சிக்கு இணையாகவே இருக்கிறது. இதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான சமூகம் மகிழ்ச்சியை வருபவர்களுக்கும் கடத்தும் என்பது நிரூபணமாகியுள்ளது. மகிழ்ச்சியான நாடுகளுக்கு குடியேறுபவர்கள் பயனடைகின்றனர் மகிழ்ச்சியற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் நிம்மதி இழக்கின்றனர்.
அதேபோல் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள ஸ்கேண்டினேவியன் நாடுகளும் தங்கள் மக்களின் வாழ்நிலையை நலமாக வைத்துக்கொள்ள குறிப்பிடத்தக்க பணியை மேற்கொள்கின்றன என்பது தெரிகிறது" என்றார்.


18-வது இடத்துக்கு சரிந்த அமெரிக்கா..
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இதுவரை அமெரிக்கா ஒருமுறைகூட டாப் 10-ல் இடம்பெற்றதில்லை. ஒரேஒருமுறை 11-வது இடத்துக்கு வந்தது. கடந்த 2017-ல் 14-வது இடத்திலிருந்த அமெரிக்கா இந்த ஆண்டு 18-வது இடத்துக்கு சரிந்துள்ளது. அமெரிக்காவில் மக்களின் வருவாயில் அதிகளவில் ஏற்றத்தாழ்வு நிலவுவதால் அதன் தரம் 14-வது இடத்திலிருந்து 18-வது இடத்துக்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close