[X] Close

விண்டோஸ் 10 பதிப்பின் அக்டோபர் மாத அப்டேட்டில் பிரச்சினை 


windows-10-update-issue

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 08 Oct, 2018 16:38 pm
  • அ+ அ-

விண்டோஸ் 10 பதிப்பின் அடுத்த அப்டேட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறுத்திவைத்துள்ளது. இந்த அப்டேட் செய்த பிறகு கணிணியில் இருக்கும் சில ஃபைல்கள் காணாமல் போவதாகப் புகார் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட், தனது உதவி பக்கத்தில், விண்டோஸ் 10-க்கான அக்டோபர் 2018 அப்டேட், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட்டுக்குப் பிறகு சில ஃபைல்கள் காணாமல் போனதாக சில பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஏன் சில ஃபைல்கள் திடீரென காணாமல் போகின்றன, அல்லது டெலிட் ஆகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் இந்த அப்டேட், டாகுமெண்ட்ஸ் (Documents), பிக்சர்ஸ் (Pictures) மற்றும் மற்ற ஃபோல்டர்களை பாதிப்பதாகத் தெரிகிறது. 

- ஏ.என்.ஐ

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close