[X] Close

மலைப்பாம்பிடம் சிக்கிய நாய்: லாவகமாக காப்பாற்றிய சிறுவர்கள்


children-fight-off-a-monster-snake

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 19:17 pm
  • அ+ அ-

மலைப்பாம்பிடம் சிக்கிக் கொண்ட நாய் ஒன்றை மூன்று சிறுவர்கள் சேர்ந்து காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ எந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோவில் சற்றே பெரிய மலைப் பாம்பிடம் இருந்து நாயை போராடி மீட்கின்றனர் மூன்று சிறுவர்கள்.

 நாயின் இடுப்புப் பகுதியை சுற்றிக்கொண்ட அந்த பாம்பின் தலைப்பகுதியை ஒரு சிறுவன் ஒரு கட்டையால் வைத்து அழுத்திக்கொள்ள, இன்னொரு சிறுவன் பாம்பின் வாலை பிடித்துக்கொள்ள இன்னொரு சிறுவன் நாயின் உடலில் சுற்றியிருந்த பாம்பினை முழுமையாக எடுத்து, நாயை காப்பாற்றுகிறார்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை பிஞ்சு நெஞ்சங்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close