[X] Close

H2O தெரியாமல் பேந்த பேந்த முழித்த மாடல் அழகி


model-blinks-for-h20

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 18:59 pm
  • அ+ அ-

அழகிப் போட்டிகளில் கட்டாயம் கடைசி ரவுண்டில் ஏதாவது கேள்வி கேட்பார்கள். அந்த பதில் கூட அவர்களுக்குப் பட்டத்தைப் பெற்றுத் தரலாம்.

நான் இறந்த பின்னரும் இந்த உலகை பார்க்க விரும்புகிறேன். அதனால் கண் தானம் செய்வேன் என்று கூறிய ஐஸ்வர்யா ராய் ஆகட்டும். நான் விரும்பும் உன்னதமான வேலை தாயாக இருப்பதே எனக் கூறிய மனுஷி சிலாராக இருக்கட்டும் அற்புதமான பதில்களால் பரிசை வென்றவர்களாவர்.

அண்மையில் நடந்த மிஸ் வங்கதேசம் அழகிப் போட்டியில் ஒரு போட்டியாளரிடம் H2O என்றால் என்னவென்று கேட்கப்பட்டது. 3-ம் வகுப்பு குழந்தைகூட இது தண்ணீர் எனக் கூறிவிடும்.

ஆனால், அந்த அழகியோ பேந்த பேந்த முழித்தார். அதில், அதி பயங்கரமான கேள்வியைக் கேட்டதுபோல் இன்னொரு முறை கேள்வியை சொல்லுங்கள் என்று கேட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close