[X] Close

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு


physicist-stephen-hawking-passes-away-at-76

ஸ்டீபன் ஹாக்கிங்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Mar, 2018 09:50 am
  • அ+ அ-

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.

லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.


அவரது மறைவு தங்களை பெருந்துயருக்கு ஆழ்த்தியுள்ளதாக அவரது பிள்ளைகள் லூஸி, ராபர்ட், டிம் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.

"எங்கள் அன்புத் தந்தை எங்களைவிட்டு பிரிந்தார். அவரது மறைவு எங்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
அவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி, அசாதாரண மனிதர். அவரது பணிகளும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மதிநுட்பமும் ஹாஸ்ய உணர்வும் உலகில் பலரை கட்டிவைத்திருக்கிறது.


"இந்த அண்டம் நீங்கள் விரும்பும் மனிதர்களின் வசிப்பிடமாக இல்லாவிட்டால் அர்த்தமற்றதாக இருந்திருக்கும்" என்று ஒரு முறை அவர் கூறியதை நாங்கள் இப்போது நினைவுகூர்கிறோம். அவரது இழப்பு எங்களை என்றென்றும் வாட்டும்" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


கருந்துளை (black holes) குறித்த ஆய்வில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.

 

-ஏஎஃப்பி

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close