[X] Close

கேமராவைப் பார்த்ததும் சிலுப்பிக்கொண்ட ஜெஸ்ஸி!- வைரலாகும் வீடியோ


snow-leopard-in-london-zoo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Oct, 2018 16:47 pm
  • அ+ அ-

இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள பாரடைஸ் உயிரியல் பூங்காவில் தூங்கி கொண்டிருந்த பனிச்சிறுத்தை ஒன்று தூங்கியெழும் போது திடீரென கேமராவை பார்த்ததும் சிலுப்பிக்கொண்ட வீடியோ காட்சிகளை பூங்கா நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்த காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரடைஸ் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் ஆரோக்கியம் , அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

கேமராக்களின் தரம் தற்போது மேம்படுத்தப்பட்டது. அப்போது பூங்காவில் இருக்கும் 4 வயது மதிக்கத்தக்க ஜெஸ்ஸி புதிதாக பொருத்தப்பட்ட கேமராவைப் பார்த்து சற்றே அதிர்ச்சியில் சிலுப்பிக் கொண்டது.  அந்த காட்சிகளை பூங்கா நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. குட்டிச் சிறுத்தையின் ரியாக்‌ஷன் ரசிக்கும்படியாக உள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close