[X] Close

ரஷ்ய இளம்பெண்ணுக்கு ஐஃபோன் மாடலில் கல்லறை!


smartphone-addict-buried-under-5-ft-tombstone-shaped-like-an-iphone

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Sep, 2018 20:11 pm
  • அ+ அ-

ஐஃபோன் ரசிகர்கள், வெறியர்கள் இருக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் உயிர் இருக்கும்வரைதானே. ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு மட்டும் இடுகாடுவரை ஐஃபோன் பந்தம் தொடர்ந்திருக்கிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு மரித்தார். அவரது கல்லறையின் மேலே ஐஃபோன் போல ஒரு மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறது. 5 அடி உயரத்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது. உஃபா நகரில் உள்ள யூசோனி என்ற இடத்தில்தான் இப்படி ஒரு வினோத கல்லறை கட்டப்பட்டிருக்கிறது. அந்த சமாதியின் கீழ் QR கோட் கூட பொரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த செய்தி இப்போதுதான் வெளியில் தெரியவந்திருக்கிறது. கல்லறையில்கூட ஐஃபோன் மோகமா என்று இச்செய்தி வைரலாகி வருகிறது.

அந்த இடுகாட்டுக்கு வேறு ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற பெண் ஒருவர் இந்த வினோத கல்லறையைப் பார்த்து வியப்படைந்திருக்கிறார்.

இது குறித்து அவர், "நான் என் வாழ்நாளில் இப்படி ஒரு கல்லறையைப் பார்த்ததில்லை. முதலில் என்னால் நம்ப முடியவில்லை. அருகில் சென்று பார்த்தபோதுதான் என்னால் நம்ப முடிந்தது" எனக் கூறியிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close