[X] Close

ரபேல் விவகாரத்தில் மோடி சொல்வது சரிதான்!- முன்னாள் அதிபர் கொளுத்தியதை முடித்துவைத்த இந்நாள் அதிபர்


pm-modi-is-right

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Sep, 2018 12:14 pm
  • அ+ அ-

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல்ஸ் போர் விமான ஒப்பந்தம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ள நிலையில் அதற்கான நிவாரணமும் தற்போது பிரான்ஸில் இருந்தே வந்துள்ளது.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வறுத்தெடுத்து வரும் நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தர்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரோனின் கருத்து வந்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஏஎன்ஐ செய்தியாளரின் கேள்விக்கு, "பிரதமர் மோடி ரபேல் விமான ஒப்பந்தத்தில் தனக்கு தொடர்பு இல்லை எனக் கூறியிருப்பது சரியானதே. இது இரண்டு அரசாங்களுக்கு இடையேயான ஆலோசனை. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நெருங்கிய பந்தம் இருக்கிறது. வேறு எந்த ஒரு விஷயம் குறித்தும் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு வழங்க இந்திய அரசே பரிந்துரைத்தது. டசால்ட் நிறுவனம் எந்த இந்திய நிறுவனத்துடன் இணைந்து ரபேல் விமானத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற வாய்ப்பை மத்திய அரசு தரவில்லை. இந்திய அரசுதான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற கூறியது" என்று தெரிவித்திருந்தார்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close