[X] Close

49 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு


indonesian-teen-rescued-after-drifting-49-days-at-sea

சித்தரிப்புப் படம்: ஏ.எஃப்.பி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 26 Sep, 2018 17:41 pm
  • அ+ அ-

அல்தி நாவல் அதிலாங் என்கின்ற இந்தோனேசிய இளைஞர், நடுக்கடலில் 49 நாட்கள் தத்தளித்த பின் மீட்கப்பட்டுள்ளார்.

அதிலாங், 'ராம்பாங்க்' என்கிற மீன்பொறி மிதவையில் வேலை செய்துவருகிறார். நடுக்கடலில் மிதக்கும் இந்த மீன்பொறியில் வேலை செய்வதால் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே கரைக்கு வர முடியும். அவரிடம் ஒரு வாக்கி டாக்கியும் உள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி, பலமான காற்றின் காரணமாக, அதிலாங்க் இருந்த மிதவை பல ஆயிரம் கிலோமிட்டர் தூரம் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

நடுக்கடலில் தத்தளித்த அதிலாங் பயத்தில் அடிக்கடி அழுதுள்ளார். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பெரிய கப்பலைப் பார்க்கும் போது, தான் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் கிட்டத்தட்ட 10 கப்பல்களுக்கு மேல் அவரைக் கடந்து சென்றது. யாரும் இவரை கவனிக்கவில்லை. 

அந்த மிதவையில் சமைப்பதற்கு வசதி இருந்ததால் அதிலாங் கடலில் மீன் பிடித்து சமைத்து சாப்பிட்டுள்ளார். கடல் தண்ணீரையே குடித்துள்ளார். சமையல் எரிவாயு தீர்ந்த பின், மிதவையின் மர வேலிகளை உடைத்து, எரித்து, சமையலுக்குப் பயன்படுத்தியுள்ளார். 

ஒருவழியாக 49 நாள் கழித்து, அந்த வழியாக வந்த பனாமா நாட்டு கப்பல் ஒன்று அதிலாங்கை கவனித்து அவரை மீட்டுள்ளது. அதிலாங்கின் ரேடியோவிலிருந்து வந்த சிக்னலை வைத்தே அவரை மீட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அதிலாங்கை மீட்டு ஜப்பானில் சேர்த்தனர் கப்பல் அதிகாரிகள். உடனடியாக இந்தோனேசிய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அதிலாங்கின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டு, தேவையான ஆவணங்களை தயார் செய்து அதிலாங்கை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். 

தற்போது தனது குடும்பத்தினருடன் இணைந்துவிட்ட அதிலாங்க், நல்ல ஆரோக்கியத்தில் உள்ளார். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close