[X] Close

நேபாளின் வாழும் பெண் தெய்வம்: வயது நான்கு


meet-trishna-shakya-nepal-s-living-goddess

குமாரி த்ரிஷ்னா ஷாக்யா | படம்: ஏ.என்.ஐ

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 26 Sep, 2018 15:22 pm
  • அ+ அ-

நேபாளின் வாழும் பெண் தெய்வமான த்ரிஷ்னா ஷாக்யா முதன் முதலாக பொதுமக்கள் பார்வைக்கு வந்தார். 

திங்கட்கிழமை நடந்த இந்த்ரஜாத்ரா என்ற பாரம்பரிய பண்டிகையை முன்னிட்டு ஷாக்யா பொதுமக்கள் முன் வந்தார். அதிகாலை முதலே பெரிய கூட்டம் ஷாக்யாவைப் பார்க்கக் கூடியது. அவர் ரதத்தில் நகரம் முழுவதும் உலா வந்தார். நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

ஷாக்யா, 'குமாரி கர்' என்ற தனது வீட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். இந்த வீடு பசந்தபுர் தர்பார் பகுதியில் உள்ளது. இந்த வீடு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காத்மண்டு பள்ளத்தாக்கின் பூர்வகுடிகள் நேவார் சமூகத்தினர். இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தெய்வமாக வணங்குவது நேபாளில் பாரம்பரிய வழக்கம். பல்வேறு ஆன்மிக சோதனைகளைக் கடந்த பிறகே ஒரு பெண் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

வழிபடப்படும் பெண் பருவமடையும் நேரத்தில், அடுத்த 'குமாரி' (பெண் தெய்வம்) தேர்ந்தெடுக்கப்படுவார். 

- ஏ.என்.ஐ
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close