[X] Close

கைகொட்டி சிரித்த ஐ.நா., அரங்கு!- தட்ஸ் ஓகே என்று சமாளித்த அதிபர் ட்ரம்ப்


world-laughed-at-trump-literally

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Sep, 2018 11:57 am
  • அ+ அ-

ஐ.நா., பொதுக்கூட்டத்தில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பார்த்து அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்த தருணத்தை ஒரு சாமான்யன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தால் ட்ரம்ப் படத்தைப் போட்டு - "தட் உன்னைப் பார்த்து உலகம் சிரிக்கிறதே மொமன்ட்!" என்றுதான் பதிவிட்டிருக்கக்கூடும்.

ஆனால், ட்ரம்ப் பார்த்து உலக தலைவர்கள் சிரித்த விஷயம் சாதாரணமானது அல்ல. ரஷ்யா, கனடா, ஸ்பெயின், இந்தியா, சீனா என எல்லா நாடுகளிலும் இதுதான் தலைப்புச் செய்தியாகி வருகிறது.

ட்ரம்ப் பேசியது என்ன?
இன்று, நான் ஐ.நா., பொது சபையில் உங்கள் முன் நின்று அமெரிக்காவின் அளப்பரிய சாதனைகளைப் பற்றி பேசவிருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த தலைவரின் கீழான நிர்வாகமும் சாதிக்காததை சாதித்திருக்கிறது. இதுதான் உண்மை" என்று பேசினார்.
அவர் பேசிய இடைவெளியில் முதலில் லேசாக ஆரம்பித்த சிரிப்பலை.. "இதை நான் எதிர்பார்க்கவில்லை. தட்ஸ் ஓகே" என்று  என்று கூறியவுடன் அரங்கமே அதிர்ந்தது.

மழுப்பிய ட்ரம்ப்:
ட்ரம்ப் இதற்கு முன்னாள் பல தருணங்களில் இதே வாக்கியத்தைப் பேசியிருக்கிறார். இதை பல்வேறு ஊடகங்களும் விமர்சித்திருக்கின்றன. இந்நிலையில், ஐ.நா., சபையிலும் அதையே கூறிவிட்டு. ஒரு நேனோ செகண்ட் இடைவெளியில் அமெரிக்கா உண்மையைத்தான் சொல்லும் என்று சொல்லவே ஐ.நா அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப ட்ரம்ப்போ நான் அரங்கத்தில் சிரிப்பொலி எழ வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தேன் என்றார்.

ஆனால், அமெரிக்க ஊடகங்களோ குறிப்பாக சிஎன்என் ட்ரம்பை மிகக் கடுமையாக சாடி வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close