[X] Close

மன உளைச்சலுக்கு பதில் என்ன? - பேஸ்புக் மீது வழக்கு தொடுத்த பதிவு நெறியாளர் 


facebook-failing-to-protect-moderators-from-mental-trauma-lawsuit-claims

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 25 Sep, 2018 17:32 pm
  • அ+ அ-

பிரபல சமூக ஊடகமான பேஸ்புக்கில் பதிவு நெறியாளராக இருந்த செலீனா என்பவர், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்.

பேஸ்புக்கில் நெறியாளர்கள் அதிக மன அழுத்தம் தரும் பதிவுகளை பார்க்க நேரிடுகிறது. கொலை, தற்கொலை, பாலியல் தாக்குதல் என ஆயிரக்கணக்கான பதிவுகள், வீடியோக்கள், புகைப்படங்கள், நேரலைகள், நெறியாளர்கள் பார்வைக்கு தினசரி செல்கிறது. 

அந்தப் பணியாளர்களுக்கான சிகிச்சைக்கும், அவர்கள் பாதுகாப்புக்கும் பேஸ்புக் எதுவும் செய்வதில்லை, கடமையை புறக்கணித்துவிட்டது என்று செலீனா குற்றம்சாட்டியுள்ளார். 

இந்த வழக்கு பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு, நிறுவனத்திலேயே, போதிய உளவியல் சிகிச்சையும், ஆதரவும் தரப்படுகிறது என்றும் கூறியுள்ளது. 

- ஏ.என்.ஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close