[X] Close

மனைவி கையால் சமைத்த சிக்கன் பிரியாணி!- ஒரு புற்றுநோயாளியின் கடைசி ஆசையும் உருக்கமான பேச்சும்


man-eats-biryani-before-getting-his-cancer-affected-stomach-removed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Sep, 2018 11:55 am
  • அ+ அ-

நம் எல்லோருக்குமே ஆசை இருக்கும். நம் கடைசி மூச்சு வரை ஆசை இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், துபாயைச் சேர்ந்த குலாம் அப்பாஸின் ஆசை வித்தியாசமானது. 

குலாம் அப்பாஸ் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அண்மையில் அவருக்கு உடல் எடை குறைந்ததோடு அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் ரஷீத் மருத்துவமனையில் காஸ்ட்ரோஎன்ட்ராலஜி துறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அதுவும் 3-வது ஸ்டேஜை நோய் எட்டியிருந்தது. 

அப்போது மருத்துவர்கள் வயிற்றை வெட்டி எடுத்து அப்புறப்படுத்துவதே மட்டுமே உயிர் பிழைக்க ஒரே வழி எனக் கூறினர். குலாம் அப்பாஸும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, "இந்த முடிவை எட்டுவது மிகக் கடினமாக இருந்தது. ஆனால் உயிர் பிழைக்க அதைத் தவிர வேறு வழியே இல்லை. எனது பிள்ளைகள் நான் இல்லாமல் வளர்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் சாதனைகளை பார்க்க வேண்டும். ஏன் அவர்கள் சிறு சண்டையிட்டுக் கொள்வதையும்கூட பார்க்க வேண்டும். எனது குடும்பத்தை விட்டு பிரிய மனதில்லாததால் வயிற்றைவிட்டு பிரிய முடிவு செய்தேன்" எனக் கூறினார்.

அறுவை சிகிச்சைக்கு முன் பிரியாணி!

மருத்துவர்களும் அறுவை சிகிச்சைக்கான நாளை குறித்தனர். அப்போது அறுவை சிகிச்சைக்கு முன் பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவித்தார். மருத்துவர்களும் ஏற்றுக் கொள்ள. வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்கிறது. அதை ரசித்து சாப்பிட்டிருக்கிறார் குலாம் அப்பாஸ்.

பிரியாணி சாப்பிட்டது குறித்து, "எனது வயிறு அகற்றப்படுவதற்கு முன்னதாக எனக்குப் பிடித்தமான உணவை கடைசியாக சாப்பிட வேண்டும் என விரும்பினேன். எனது மனைவியிடம் சிக்கன் பிரியாணி செய்து தருமாறு சொன்னேன். அவரும் செய்தார். அந்த பிரியாணியை எனது சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அதை நான் கிட்டத்தட்ட பறித்து உண்டேன் என்றுதான் சொல்லவேண்டும்" என்றார்.

இனிதே முடிந்தது:

குலாம் அப்பாஸுக்கு அறுவை சிகிச்சை இனிதே நடந்து முடிந்தது. தற்போது அவர் கீமோதெரபி சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவின் தலைவர் டாக்டர் அலி கம்மாஸ், "இளம் வயதினருக்கு வரும் கேன்சர் மிகவும் தீவிரமாக இருக்கிறது. அதனாலேயே குலாம் அப்பாஸுக்கும் வயிற்றை அகற்றும் சிகிச்சையை மேற்கொண்டோம். குடல் புற்றுநோய் பாதிப்புக்கு இது மாதிரியான அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். ஆனால், வயிற்றில் ஏற்பட்ட கேன்சருக்கு துபாயில் முதன்முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close