[X] Close

இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்கள் ராஜினாமா!


instagram-co-founders-resigns

  • kamadenu
  • Posted: 25 Sep, 2018 10:14 am
  • அ+ அ-

இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாகி கெவின் சிஸ்ட்ரோம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளார். தானும் மற்றொரு இணை நிறுவனரான மைக் க்ரீகரும் இன்னும் சில வாரங்களில் பதவி விலகப் போவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலி 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராமை ரூ. 100 கோடிக்கு வாங்கியது.

இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் தங்களின் திடீர் ராஜினாமா முடிவுக்கு என்ன காரணம் என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால் தங்களது ஆக்கத்திறனை புதுப்பித்துக் கொள்ள இந்த முடிவு என சிஸ்ட்ரோம் கூறியுள்ளார்.

உருவாக்கப்பட்டது முதலே அபார வளர்ச்சியை கண்டு வரும் இன்ஸ்டாகிராம் செயலியை மாதம் 100 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 லட்சத்துக்கும் அதிகமான விளம்பரதாரர்களும் இதில் உள்ளனர். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close