[X] Close

வீம் அல் தஹீல்: இவர்தான் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்


weamaldakheel

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Sep, 2018 14:49 pm
  • அ+ அ-

சவுதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் வீம் அல் தஹீல். அந்நாட்டின் அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

அரசின் இந்த முடிவிற்கு பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். சவுதி மட்டுமல்ல பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்களும் இதை வரவேற்றுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகளுக்கு முடிவு கட்டப்படு வருகின்றன. 

அந்த வரிசையில், பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, திரையரங்கு செல்ல அனுமதி, விளையாட்டுப் போட்டிகளை கேலரியில் அமர்ந்து பார்க்க அனுமதி என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் தற்போது பெண் செய்தி வாசிப்பாளருக்கான அனுமதியும் இணைந்திருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close