[X] Close

பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்!- மோடியை மறைமுகமாக விளாசிய இம்ரான் கான்


i-have-come-across-small-men-occupying-big-offices

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Sep, 2018 16:18 pm
  • அ+ அ-

இந்தியா பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால், அதில் அவர் குறிப்பிட்டுள்ள பெரிய மனிதர் மறைமுகமாக பிரதமர் மோடியை குறிப்பதுபோல் அமைந்துள்ளது.
அவர் தனது ட்விட்டரில், "அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்திருக்கும் அராஜகமான எதிர்மறையான போக்கு எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் பெரிய பதவிகளை சிறிய மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இருக்காது" என விமர்சித்திருக்கிறார்.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பினார்.

இதற்கு நன்றி தெரிவித்து கடந்த 14-ம் தேதி இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பினார். அதில், "இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்" என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, "அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷியை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசுவார்" என்று கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் காஷ்மீர் போலீஸாரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்திருப்பதால் இருதரப்பு பேச்சுவார்த்தையை மத்திய அரசு நேற்று வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. 

இந்நிலையில், இம்ரான் கான் தனது ஏமாற்றத்தையும் கண்டனத்தையும் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close