[X] Close

ரபேல் போர் விமானம்: முன்னாள் அதிபரின் கருத்தால் வெடித்துள்ள அடுத்த சர்ச்சை


hollande-remarks-set-off-fresh-rafale-crossfire

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Sep, 2018 10:22 am
  • அ+ அ-

ஒரு போர் விமான ஒப்பந்தம் உள்நாட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே தினமும் யுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தைதான் குறிப்பிடுகிறோம்.

சர்ச்சை ஏன்?
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர்விமானங்களை கொள்முதல் செய்ய மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானக் கொள்முதலில் காங்கிரஸ் கட்சி நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குகிறது, இதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

மேலும், ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) புறக்கணித்து விட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது சர்ச்சை ஆகியுள்ளது. 

கொளுத்திப் போட்ட முன்னாள் தலைவர்:
இந்நிலையில், எச்.ஏ.எல். முன்னாள் தலைவர் சுவர்ணா ராஜு அளித்த பேட்டியில், "நான்காம் தலைமுறை போர் விமானமான, 25 டன் எடையுள்ள சுகோய்–30 ரக போர் விமானங்களையே எச்.ஏ.எல். தயாரிக்கும்போது, 'ரபேல்' விமானங்களை எளிதாக தயாரித்து இருக்க முடியும்" என்று கூறினார். இது போதாதா! காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தை இன்னும் சூடேற்றி வருகிறது.

ரபேல் அமைச்சர்:
எப்போது பார்த்தாலும் ரபேல் ஒப்பந்தத்துக்கு வக்காலத்து வாங்க வருவதால் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை ரபேல் அமைச்சர் என்றுதான் ராகுல் கூப்பிட்டு வருகிறாஅர். இவ்விவகாரத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். 

அடுத்தடுத்து சர்ச்சை..
காங்கிரஸ் புகைந்து கொண்டிருக்கும் வேளையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியிருக்கிறார். இது இந்த சர்ச்சைக்கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அந்நாட்டு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், "பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரான்ஸ் நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அம்பானி குழுமத்துடன். மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது" என தெரிவித்துள்ளார். 

அது வர்த்தக கூட்டாளி விவகாரம்!
பிரான்ஸ் அரசு முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து குறித்து பிரான்ஸ் அரசு "இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகள் பற்றிய விஷயத்தில் பிரான்சு அரசு தலையிடவில்லை. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர்விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது மட்டுமே எங்களின் பணியாகும்" என்று தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close