[X] Close

சேட்டிங் பழசு: ஃபேஸ்புக்கில் இப்ப டேட்டிங்தான் புதுசு!


facebook-dating-now-available-to-some-users

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Sep, 2018 18:56 pm
  • அ+ அ-

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் டேட்டிங் ஃபீச்சர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பரிச்சார்த்த முறையில் இப்போது குறிப்பிட்ட பயனாளர்கள் சிலருக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

டிண்டர் போல் அல்லாமல் ஃபேஸ்புக்கில் டேட்டிங் அப்ளிகேஷன் சற்று வித்தியாசமாக இயங்குகிறது. இங்கே நிஜ வாழ்வில் டேட்டிங் எப்படி ஒர்க் அவுட் ஆகிறதோ அதேபோல்தான் நீங்கள் ஒரு மூவ் செய்துவிட்டு காத்திருக்க வேண்டும்.

ஆனால், இதைப் பயன்படுத்த பயனாளருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதேபோல் ஸ்டேட்டஸ் சிங்கிள் என இருக்க வேண்டும்.

டேட்டிங் புரோஃபைல் ஒன்று உருவாக்க வேண்டும். மொபைல் ஜிபிஎஸ் பயன்படுத்தி இருப்பிட தகவல்களை வெளியிட வேண்டும். உங்கள் வசிப்பிடத்திலிருந்து 100 கி.மீ., தூரத்துக்குள் பொருத்தமான நபர்களை அடையாளம் காட்டும். அதிலிருந்து உங்களுக்கு விருப்பமான டேட்டிங் மேட்சை நீங்கள் தேர்வு செய்ய இயலும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close