[X] Close

விமானத்தில் கனிந்தது காதல்; பறிபோனது வேலை


china-eastern-airlines-fires-flight-attendant-after-mid-flight-marriage-proposal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Sep, 2018 16:29 pm
  • அ+ அ-

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் காதலால் இப்போது ஒரு விமான சிப்பந்திக்கு வேலை பறிபோயுள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பணிபுரிந்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உபசரிப்பில் கவனக்குறைவாக இருந்ததால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அப்படி என்ன கவனக் குறைவு என்கிறீர்களா? அந்த விமானத்தில் வந்த பணிப்பெண்ணின் ஆண் நண்பர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவருக்கு காதலை சொல்லியிருக்கிறார்.

அந்தப் பெண்ணும் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இது தனக்கு இன்ப அதிர்ச்சி என்று விமானத்தின் ஒலிபெருக்கி வாயிலாக பேசினார். அவரது காதலை அந்த நிறுவனம் தடுக்கவில்லை எதிர்க்கவில்லை. ஆனால், பணி நேரத்தில் கவனக் குறைவாக இருந்ததாகக் கூறி வேலையைவிட்டு நீக்கியிருக்கிறது.

காதலை சொன்ன நிகழ்வு கடந்த மே மாதம் நடந்திருந்தாலும் அவரை இப்போதுதான் பணியில் இருந்து நீக்கியிருக்கிறது ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close