[X] Close

ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெர்ரிகளில் ஊசி வைக்கும் விஷமிகள்: 15 ஆண்டுகள் தண்டனை என அரசு அறிவிப்பு


australian-strawberry-needle

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 18:00 pm
  • அ+ அ-

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் மெல்லிய ஊசியை வைப்பது தீவிரவாதச் செயலுக்கு ஒப்பாகும். இதைச்  செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் சில விஷமிகள் மெல்லிய ஊசியை நுழைத்து மறைத்து வைப்பதாக செய்திகள் பரவின. ஸ்ட்ராபெர்ரி வாங்கிச் சென்று சாப்பிட்ட சிலருக்கு தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி அவதிக்குள்ளானார்கள்.

மேலும், பலர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சாப்பிடும் போது, அதில் ஊசி இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தனர்.

ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கு நியூசிலாந்து அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஊடகங்களிடம் பேசிய போது, ''மக்கள் சாப்பிடும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசியை மறைத்து வைக்கும் செயல் தீவிரவாதத்துக்கு ஒப்பாகும். இதுவரை 20-க்கும் மேற்பட்ட பழங்களில் ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் இங்கு நடந்தது இல்லை. இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் கோழைகள். அவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்கப்படும்.

விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வழி செய்வோம். இந்தச் செயலால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பறிப்பதும், விற்பனை செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்''  என்று தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close